கோ. பழனி, வ. கீதா
பிள்ளைத்தமிழ் – குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் நாடகக்கருக்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியருக்கான குறிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நூல். குழந்தைகளின் உள்ளார்ந்த கனவுணர்வு, சொல்லாட்சி, மொழியை ஆளுவதில் அவர்கள் காட்டும் திறமை, கற்பனை, ஆகியவற்றை சார்ந்தும் அவற்றை வளர்க்கவும் மொழிக்கல்வி உதவ வேண்டும் என்ற கருத்தை இந்நூல் வலியுறுத்துகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தாரா பதிப்பகம் மேற்கொண்ட கள ஆய்வுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட அசிரியர்களைக் கொண்டு நடத்திய பட்டறைகளும் தந்த படிப்பினைகளும் இந்நூலை உருவாக்க உதவின.