மோய்னா சித்திரகார் ஜெயதேவ் சித்திரகார், ஜோ டி குரூஸ்
சுனாமி – மானுடகுல வரலாற்றில் மறக்கமுடியாத அனுபவமாகப் பதிந்துவிட்ட நிகழ்வு. கடலோர மக்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட ஆழிப்பேரலையின் கதையை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த “பட்டுவா” கலைஞர்கள் சுருள் ஓவியமாகத் தீட்டினர். அந்த ஓவியத்தை விளக்கும் ஓப்பாரிப் பாடலையும் உடன் இசைத்தனர்.
பரபரப்பான நிகழ்வுகளை கலையாகவும் கதையாகவும் ரசமாற்றம் செய்வது பட்டுவா ஓவியர்களுக்குக் கைவந்த கலை. அவர்கள் கையாளும் சுருள் வடிவத்தை உள்ளபடியே தமிழ் வாசகர்களுக்கு வழங்க எண்ணி, சுருள் புத்தகம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். வங்கமொழி ஓப்பாரிப் பாடலை ஆங்கிலம்வழி நாவலாசிரியர் ஜோ டி குரூஸ் மொழிப்பெயர்த்துள்ளார்.